2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

15 இலட்சம் குளங்களில் மீன்குஞ்சுகளை விட நடவடிக்கை

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 11 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)

தேசத்துக்கு மகுடம் அபிவிருத்தித் திட்டங்களின் கீழ் அநுராதபுர மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடித்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் 15 இலட்சம் மீன்குஞ்சுகள் குளங்கள் பலவற்றிலும் விடப்படவுள்ளதாக மாகாண நீர்ப்பாசன நன்னீர் மீன்பிடி அபிவிருத்தி;த்துறை அமைச்சர் ஆர்.எம்.கே.பீ.ரத்னாயக்க   தெரிவித்தார்.

நன்னீர் மீன்பிடித்துறையை விருத்தி செய்வது தொடர்பாக மாகாண அமைச்சின் காரியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட ஆலோசனைக்கமைய இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கென அரசாங்கம் முதற்கட்டமாக ஏழு இலட்சத்து எழுபதாயிரம் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X