2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

2 இளைஞர்களைக் கடத்தி தாக்கியதாக கூறப்படும் நால்வர் பிணையில் விடுதலை

Super User   / 2013 மார்ச் 28 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எப்.ஜெஸீரா

புத்தளம், நூர் நகர் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களைக் கடத்தி தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நான்கு பேரையும் பிணையில் செல்வதற்கு புத்தளம் மாவட்ட நீதிமன்றம் நேற்று புதன்கிழமை அனுமதி வழங்கியது.

இந்த இரண்டு இளைஞர்கள் நூர் பள்ளிவாசல் சந்தியில் வைத்து இனந்தெரியாத குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டு பின்னர் கடுமையான தாக்குதலுக்குள்ளான நிலையில் கடத்திச் செல்லப்பட்ட இடத்திலேயே மீட்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து புத்தளம் பொலிஸில் செய்யப்பட்ட  முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இதன்போது குறித்த இரு இளைஞர்களையும் தாக்கியதாகக் கூறப்படும் நான்கு பேரையும் கைது செய்த பொலிஸார்,  இளைஞர்களை கடத்துவற்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கெப் வாகனமொன்றையும் கைப்பற்றினர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட  நான்கு பேரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். இதன்போது குறித்த சந்தேக நபர்கள் நான்கு பேரையும் எதிர்வரும் விளக்கமறியளில் வைக்குமாறு  வைக்குமாறு புத்தளம் மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

எனினும் நேற்றைய தினம் குறித்த நான்கு பேரையும் பிணையில் செல்ல அனுமதி வழங்கிய நீதவான் எதிர்வரும் செப்டம்பர் மாதம் மீண்டும் நீதிமன்றில் ஆஜராக வேண்டும் எனவும் பணிப்புரை வழங்கினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X