2025 மே 21, புதன்கிழமை

20 இலட்சம் ரூபா பெறுமதியான சட்ட விரோத வலைகள் மீட்பு

Kogilavani   / 2013 மார்ச் 17 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம். ஹிஜாஸ்

சுமார் 20 இலட்சம் பெறுமதியான சட்ட விரோத வலைகளும்; மீன்பிடி உபகரணங்களும்; கல்பிட்டி களப்பு பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளன.

கல்பிட்டி கடற்படையினரும், நாரா நிறுவன அதிகாரிகளும் இணைந்து நேற்று சனிக்கிழமை நடத்திய சுற்றிவளைப்பில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

கல்பிட்டி களப்பு பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இச் சுற்றிவளைப்பு பாலக்குடா வரை நடைப்பெற்றது.

இதன்போது 120 வலைக்கூடுகள், தங்கூசி வலை மற்றும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.

இவ் உபகரணங்களினை பயன்படுத்தி இறால் பிடிப்பதன் மூலம் சிறிய மீன்களும் இவ் வலைக்குள் மாட்டிக்கொள்வதுடன் அவை வீசப்படுவதாக நாரா நிறுவன அதிகாரி தெரிவித்தார்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .