2021 மே 17, திங்கட்கிழமை

டிப்பர் வாகனம் ஆற்றில் வீழ்ந்தது; சாரதி நீரில் அடித்துச் செல்லப்பட்டார்

Super User   / 2011 நவம்பர் 24 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)

தந்திரிமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகொட பகுதியிலுள்ள மல்வத்து ஓயாவுக்கு குறுக்கான பாலப்பகுதியில் மண் ஏற்றிவந்த டிப்பர் வாகனமொன்று இன்று வியாழக்கிழமை பாதையைவிட்டு விலகி ஆற்றுக்குள் வீழ்ந்ததால் அதன் சாரதி ஆற்று நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாக தந்திரிமலை பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனத்தின் உதவியாளரும் மற்றொருவரும் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.
   
  ஆற்றுநீரில் அடித்துச்செல்லப்பட்டிருப்பவர் காலி பகுதியைச்சேர்ந்த எம்.ஜீ.லால்சந்திர (வயது-68)  என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதை புனரமைப்புக்கென கிறவல் மண் ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்த குறித்த டிப்பர் வாகனம், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் வீழ்ந்துள்ளது.

நீரில் அடித்துச்செல்லப்பட்ட சாரதியின் உடலை கண்டுபி டிப்பதற்கு பொலிஸார், இராணுவத்தினருடன் இணைந்து பொதுமக்களும் தேடுதல்களை நடத்தி வருகின்றனர். 


  Comments - 0

  • sumi Friday, 25 November 2011 08:17 PM

    செய்தியில் பிரசுரிக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் ஆற்றில் கார் ஒன்று அடித்துச் செல்லப்படுகிறதே....?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .