Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2011 டிசெம்பர் 24 , மு.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
புத்தளம் நகர சபையின் 2012ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைப்பெற்ற நகர சபைக்கூட்டத்தில் அங்கீரிக்கப்பட்டது.
புத்தளம் நகர சபைத்தலைவர் கே.ஏ.பாயிஸினால் 2012 ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் வாசிக்கப்பட்டதினை தொடர்ந்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் நால்வர்; வரவு செலவு திட்டத்தினை ஆதரித்து உரையாற்றினர். ஐ.தே.க. உறுப்பினர் எதிர்த்து உரையாற்றினார்.
வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கும் இவ் நகர சபைக்கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும், புத்தளம் நகர சபையின் பிரதான எதிர்க்கட்சயான சுயேட்சை குழு இல 08 உறுப்பினர்கள் இருவரும் கலந்து கொள்ளவில்லை.
புத்தளம் நகர சபை நில வருமானத்திலிருந்து 2012ம் ஆண்டுக்காக சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக 43,292,439.84 ரூபாவும் உள்ளக அபிவிருத்திகளுக்காக 23,063,267ரூபாவும் பொது மக்கள் நலன்புரி சேவைகளுக்காக 17,647,459 ரூபாவும் புதிய வியாபார நிர்மாண மையம் நிர்மாண பணிகளுக்காக முதல் கட்டமாக 25 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சபை நடவடிக்கைகளினை பார்வையிட வடமேல் மாகாண சபை உறுப்பினர் சிந்தக மாயாதுக்க உட்பட பலர் சமூகமளித்திருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
2 hours ago
4 hours ago
5 hours ago