2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

விவசாயிகளின் காணிப் பிரச்சினைக்கு தீர்வு

Menaka Mookandi   / 2012 ஜனவரி 02 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

மஹாவலி விவசாயத் திட்டத்தின் கீழ் வசிக்கும் விவசாயிகளின் காணிப் பிரச்சினைக்கு தேசத்திற்கு மகுடம் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் நிரந்தரத் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதன்படி மஹாவலி திட்டத்தின் கீழ் குடியேறிய விவசாயிகளின் மூன்றாவது பரம்பரையின் பல குடும்பங்களுக்கு காணி இல்லாமையினால் பல்வேறு பிரச்சினைகள் தோன்றியுள்ளன.

இதற்குத் தீர்வாக மஹாவலி அதிகார சபையின் தலையீட்டுடன் மஹாவலி கிராமங்களிலுள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறையினருக்காக 1500 காணித் துண்டுகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. இதற்கு மேலதிகமாக அக்காணித் துண்டுகளுக்கான அனுமதிப் பத்திரமும் வழங்கப்படவுள்ளது.

மஹாவலி திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 30 வருடங்களின் பின்னர் காணியற்றவர்களுக்கு காணிகளை பகிர்ந்தளிக்கும் செயற்திட்டமானது விசேட நிகழ்வாகும் என மஹாவலி எச் வலயத்திற்குப் பொறுப்பான திட்ட முகாமையாளர் அசங்க குணதிலக்க தெரிவித்தார்.

காணியற்றவர்களுக்கு 40 பர்சஸ் காணித் துண்டு வீதம் வழங்கப்படவுள்ளதோடு இதற்குப் பொருத்தமான காணிகள் நொச்சியாகம, தலாவ முற்றும் மீகலேவ பகுதிகளில் தெரிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X