2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம் மாவட்ட கடற்கரையோரங்களில் கண்டல் தாவரம் நடும் வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 14 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

புத்தளம் மாவட்ட கடற்கரையோரங்களில் 12,000  கண்டல் தாவரங்களை நடும் திட்டத்தினை வடமேல் மாகாண வீதி அபிவிருத்தி மின்சார வீடமைப்பு நிர்மாண கடற்றொழில் அமைச்சு  மேற்கொண்டு வருகின்றது.

புத்தளத்திலும் சிலாபத்திலுமுள்ள ஆறு  பாடசாலைகளின் மூலம் கண்டல் தாவரங்களை நடும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. கண்டல் தாவரங்களை நடுவதற்கும் அவற்றை பராமரிப்பதற்காகவும் பாடசாலையொன்றுக்கு 50,000 ரூபா வடமேல் மாகாண வீதி அபிவிருத்தி மின்சார வீடமைப்பு நிர்மாண கடற்றொழில் அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.

இப்பாடசாலைகளுக்கு நிதி வழங்கும் நிகழ்வு  வடமேல் மாகாண வீதி அபிவிருத்தி, மின்சார வீடமைப்பு நிர்மாண கடற்றொழில் அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா தலைமையில் நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X