2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

குடும்பஸ்தர் வெட்டிக் கொலை

Menaka Mookandi   / 2012 ஜனவரி 14 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா) 

நீர்கொழும்பு, துங்கல்பிட்டிய பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்தில் வர்ணகுலசூரிய அசித்த சரத்குமார (36 வயது) என்ற இரு பிள்ளைகளின் தந்தையே கொல்லப்பட்டவராவார். சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர். 

அயல் வீட்டாருடன் ஏற்பட்ட முன் விரோதமே இந்த படுகொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இக்கொலை சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X