2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

கற்பிட்டியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது

Menaka Mookandi   / 2012 மார்ச் 27 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்)

கற்பிட்டி, பத்தலங்குண்டு பிரதேசத்தில் கடற்படையினர் மேற்கொண்டு திடீர் சுற்றிவளைப்பின் போது ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

ஒவ்வொன்றும் 240 மில்லிகிராம்களைக் கொண்ட ஹெரோயின் போதைப்பொருளடங்கிய 30 பைக்கட்டுக்கள் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றியதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

பத்தலங்குண்டு மீனவக் கிராமத்திற்கு கருவாடு வியாபாரம் செய்பவரைப் போல செயற்பட்டே இச்சந்தேக நபர் அப்பிரதேசத்தில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டுவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X