2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் உட்பட அறுவருக்கு பிணை

Menaka Mookandi   / 2012 மார்ச் 27 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா)

பல இலட்சம் ரூபா வெளிநாட்டு பணம் மற்றும் உள்நாட்டு பணத்தை வர்த்தகர் ஒருவரிடமிருந்து மோசடியான முறையில் ஏமாற்றி பெற்றுகொண்ட சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நீர்கொழும்பு மாநகர சகையின் எதிர்க்கட்சி தலைவர் ரொயிஸ் விஜித பெர்ணாண்டோ உட்பட சந்தேநபர்கள் அறுவரையும் நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ.என்.எம்.பி.அமரசிங்க இன்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

சந்தேக நபர்கள் அறுவரும் தலா இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் தலா 10 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டனர்.

வியாபார நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக வேபட வீதியில் வீடொன்றில் தங்கியிருந்த வர்த்தகர் ஒருவரை பொலிஸார் போன்று நடித்து ஏமாற்றி அந்த வர்த்தகரிடமிருந்த 3,500 யூரோ நோட்டுக்களையும், 22 ஆயிரம் ரூபா பணத்தையும் அபகரித்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் இச்சம்பவத்தை அடுத்து பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் சட்டத்தரணியூடாக பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். இந்த வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X