2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

கற்பிட்டி வெடிப்புச் சம்பவத்தில் இருவர் பலி

Super User   / 2012 செப்டெம்பர் 05 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


  (சுபுன் டயஸ், பத்மகுமாரி) 


கற்பிட்டி கண்டல்குழி சிவில் பாதுகாப்பு படை முகாமுக்கு அருகிலுள்ள கடற்கரையில் இன்று குண்டொன்று வெடித்ததால்  இருவர் உயிரிழந்துள்ளனர்.  மேலும் 3 சிறார்கள் காயமடைந்துள்ளனர்.

கைக்குண்டொன்றை கண்டுடெடுத்து அதை அழுத்தியபோது இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.

 17 வயதான சிறுவனொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்தவர்கள்  கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களில் இருவர் புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். அதன்பின் 12 வயதான சிறுவன் புத்தளம் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். (படங்கள்: ஹிரான் பிரியங்கர ஜயசிங்க, அப்துல்லாஹ், எஸ். எம். மும்தாஜ், எம்.என்.எம். ஹிஜாஸ் )
.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X