2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

மதுபான போத்தல்களை லஞ்சமாகப் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 26 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்)

மதுபான போத்தல்கள் இரண்டை இலஞ்சமாகப் பெற்றதாகச் சொல்லப்படும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரங்குளி நகரிலுள்ள முச்சக்கர வண்டி தரிப்பிடத்திற்கு ஒரு முச்சக்கர வண்டியை தரிப்பிடத்தில் இணைத்துக் கொள்வதற்காக நான்கு மதுபான போத்தல்களை முச்சக்கர வண்டி உரிமையாளரிடம் இலஞ்சமாகக் கேட்டதாகவும் அதில் இரண்டு மதுபான போத்தல்களை வழங்கும் போது இவர் கைது செய்யப்பட்டதாகவும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மதுரங்குளி பொலிஸ் காவலரணில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவராவார். இவரை இன்று புதன்கிழமை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X