2025 மே 23, வெள்ளிக்கிழமை

புத்தளத்திற்கு பொன்சேகா விஜயம்

Kogilavani   / 2012 ஒக்டோபர் 27 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ். எம். மும்தாஜ், ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)


முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான சரத் பொன்சேகா  நேற்று வெள்ளிக்கிழமை புத்தளத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டார்..

இதன்போது, புத்தளம், நாகவில்லு எருக்கலம்பிட்டி மீள்குடியேற்றக்கிராமம் மற்றும் முந்தல் நகர் ஆகிய இடங்களில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வுகளில் முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா கலந்துகொண்டார்.

அப்பிரதேசத்தைச் சேர்ந்த வசதி குறைந்த சிறுவர் சிறுமியர்களுக்கு வங்கிச் சேமிப்பு வைப்புப் புத்தகங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

புத்தளம் பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவரின் ஏற்பாட்டில் தலா ஆயிரம் ரூபாய் கொண்ட சேமிப்பு வைப்புப் புத்தகங்கள் இதன்போது வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர்களான பாலித தேவபெரும, ஜயந்த கொடகொட உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.






You May Also Like

  Comments - 0

  • MADURANKULI Wednesday, 31 October 2012 09:51 PM

    இந்த படத்தில் முஸ்லிம்கள் யாரும் இல்லை. எதிர்கால சர்வாதிகார ஜனாதிபதி வேட்பாளர் வாழ்க.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X