2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

அரச காணிகளில் வசிப்போருக்கு உறுதி பத்திரம் வழங்க முதலமைச்சர் நடவடிக்கை

Super User   / 2012 நவம்பர் 22 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)

வட மத்திய மாகாணத்திலுள்ள அரச காணிகளில் வசிப்போருக்கு காணி உறுதி பத்திரங்களை வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வட மத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் தெரிவித்தார்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சுமார் 50 மற்றும் 60 வருட காலங்களுக்கு முன்னர் அரச காணிகள் பெற்ற விவசாய குடும்பங்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் காணி உறுதிப் பத்திரம் வழங்கப்படவுள்ளது என அவர் தெரிவித்தார்.

காணி  உறுதிப்பத்திரம் இல்லாமையால் விவசாயக் கடன் மற்றும் வீட்டுக் கடன் உட்பட பல சலுகைகள் இல்லாமற் போவதோடு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படாமையினால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X