2025 மே 23, வெள்ளிக்கிழமை

தீயில் கருகி பெண் மரணம்; கணவன் கைது

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 17 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)

தீப்பிடித்ததில் உயிரிழந்த பெண்ணொருவரின் கணவர் சந்தேகத்தின் பேரில் மிஹிந்தலைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அடுப்பிற்கு அருகில் விழுந்து கிடந்த குறித்த பெண்ணின் தலை மற்றும் இடுப்புப் பகுதியல் தீப்பிடித்திருந்ததைக் கண்டு உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்திருந்த போதும் அவர் உயிரிழ்ந்துள்ளார்.

மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீவல்வௌ, கல்லஞ்சிய பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணை மரணப் பரிசோதனை மேற்கொண்ட  நீதிமன்ற மரணப் பரிசோதகர் வைத்தியர் வைத்தியரத்ன, இம்மரணத்தில் சந்தேகம் உள்ளதாகத் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து மிஹிந்தலைப் பொலிஸாரினால் உயிரிழந்த பெண்ணின் கணவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X