2025 மே 22, வியாழக்கிழமை

வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி விபத்து; சாரதி கைது

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 27 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்)

பொலிஸாரின் உத்தரவை மீறி வேகமாகச் சென்ற லொறியொன்று மின்கம்பத்துடன் மோதிய நிலையில், லொறியின்  சாரதியை சிலாபம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இச்சாரதி கைதுசெய்யப்பட்டபோது அதிக மதுபோதையில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இச்சாரதி வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருக்கவில்லையெனவும் சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,

பாதுகாப்பற்ற முறையில் கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த இவ்லொறியை  சிலாபம் நகரில் கடமையிலிருந்த மோட்டார் போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் இடைமறித்துள்ளனர். எனினும் இவ்லொறி பொலிஸாரின் உத்தரவையும் மீறி பயணித்துள்ளது. 
இந்நிலையில் சிலாபம் பொலிஸார், இவ்லொறியை இடைமறிக்குமாறு மாராவில மற்றும் மாதம்பை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். இதனையடுத்து மாராவில பொலிஸார் லொறியை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். இதனையறிந்துகொண்ட லொறிச் சாரதி  மாராவில பிரதேசத்தின் உள்வீதியொன்றில் லொறியை வேகமாக செலுத்திச் சென்றுள்ள நிலையிலேயே வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி மின்கம்பத்துடன் மோதியதாக கூறினர்.

கைதுசெய்யப்பட்ட சாரதியிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X