2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

நீர் இறைக்கும் இயந்திரத்தை திருடிய இருவர் கைது

Kogilavani   / 2012 டிசெம்பர் 31 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம். சீ. சபூர்தீன்)
மதவாச்சி குலிக்கட பகுதியிலுள்ள வீடொன்றில் கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த நீர் இறைக்கும் இயந்திரத்தை (மோட்டார்) திருடிய இரு இளைஞர்களை மதவாச்சி பொலிஸார் நேற்று முன்தினம் கைதுசெய்துள்ளனர்.

உரிமையாளரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்தே சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள், நீர் இறைக்கும் இயந்திரத்தை மதவாச்சி நகரிலுள்ள நபர் ஒருவருக்கு அடகு வைத்துள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

மதவாச்சி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பீ.எம்.திஸாநாயக்காவின் ஆலோசனைப்படி குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.பீ.செனவிரத்ன உள்ளிட்ட குழுவினர் சந்தேகநபர்களைக் கைதுசெய்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X