2025 மே 22, வியாழக்கிழமை

வெள்ளத்தினால் மூழ்கும் பகுதி மக்களுக்கு வேறு காணிகள் வழங்க நடவடிக்கை

Super User   / 2013 ஜனவரி 13 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

அநுராதபுரம் மாவட்டத்தில் ஏற்படும் வெள்ளப் பெருக்கின்போது நீரிழ் மூழ்கும் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உடனடியாக பொருத்தமான காணிகளை வழங்க நடிவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வட மத்திய மாகாண முதலமைச்சர் ரஞ்சித் சமரகோனுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதிக மழை வீழ்ச்சியினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் மீண்டும் அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள பல பிரதேசங்களை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளப் பெருக்கினால் மல்வத்து ஓயாவை அண்டியுள்ள பிரதேசங்களில் வசிக்கும் மக்கள், கலா வாவியை அண்டியுள்ள பிதேசங்களில் வசிக்கும் மக்கள் புனித பூமிப் பகுதி, யாழ்ப்பாண சந்தி, மல்வத்து ஓயா பாலத்திற்கு அருகில் வசிக்கும் மக்கள் அடிக்கடி பாதிக்கப்படுகின்றனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரின் ஆலோசனைப்படி இப்பிரதேசங்களில் வசிப்போரை கட்டுக்கெலியாவ பகுதியில் குடியமர்த்தவும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் காணிகளை விவசாய நடவடிக்கைகளுக்காக ஒதுக்கவுள்ளதாக முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X