2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

வாகன விபத்தில் இருவர் பலி

Super User   / 2013 ஜனவரி 22 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்
                   
கெக்கிராவ - தம்புள்ள பிரதான வீதியின் கைலபொத்தான பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றுமொருவர் காயமடைந்துள்ளனர்.

கெப்பித்திகொள்ளாவ டிப்போவிற்குச் சொந்தமான பஸ் வண்டியொன்று கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது எதிர் திசையில் வந்த மோட்டார் வண்டி நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மோட்டார் வண்டியில் பயணித்த மூவரில் உயிரிழந்த இருவரும் தலைக் கவசம் அணிந்திருக்கவில்லை எனவும் காயமடைந்தவர் மாத்திரமே தலைக்கவசம் அணிந்திருந்ததாகவும் கெக்கிராவ பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இருவரும் முறையே 22 மற்றும் 25 வயதையுடையவர்கள் எனவும் காயமடைந்து தம்புள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர் 22 வயதுடைய நபர் எனவும் பொலிஸார்  தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .