2025 மே 22, வியாழக்கிழமை

ஜனாதிபதியின் தலைமையில் விவசாய மாநாடு

Menaka Mookandi   / 2013 ஜனவரி 30 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

ரஜரட்ட விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்கும் நோக்கில் எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜனாதிபதியின் தலைமையில் விவசாய மாநாடு ஒன்றை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

தற்போது நாட்டிலுள்ள விவசாய சங்கங்கள் ஊடாக 8 இலட்சம் பேர் அங்கத்துவம் பெற்றுள்ளனர். இவர்களில் ஒரு இலட்சம் பேரை இம்மாநாட்டிற்கு அழைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை இரசாயனப் பசளை மற்றும் கிருமிநாசினிகளின் பாவனையால் பல்வேறுபட்ட சேதங்களும் நோய்களும் ஏற்படுகின்றது.

இது தொடர்பாக சுகாதார அமைச்சு, விவசாய மற்றும் கமநல சேவைகள் அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகள், ஊடக அமைப்புகள், விற்பனை முகவர்கள் ஆகியோர்களைத் தெளிவுபடுத்தவும் நடவடிக்கை  எடுக்கபட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X