2025 மே 23, வெள்ளிக்கிழமை

நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 01 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.மும்தாஜ்

தனது நண்பர்களுடன் குளத்தில் குளித்துக்கொண்டிருந்த மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று சிலாபத்தில் இடம்பெற்றுள்ளது.

சிலாபம் முகுனுவடவான் பிரதேசத்தைச் சேர்ந்த கவிஸ்க பெர்னான்டோ (வயது 18) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
 
சிலாபம், கொக்காவில் பிரதேசத்தில் உள்ள குளம் ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை பகல் இந்த மாணவன் குளித்துக்கொண்டிருந்தபோதே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணையை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X