2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் இருவர் கைது

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 03 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.மும்தாஜ்

சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுக்கள், லேகியம், புகையிலைத்தூள் ஆகியவற்றை வைத்திருந்ததாகக் கூறப்படும் இருவர் புத்தளத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மாலை புத்தளத்தில்; மேற்கொண்ட திடீர்ச் சோதனை நடவடிக்கையின்போதே இச்சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து சிகரெட்டுக்களையும் லேகியம் மற்றும் புகையிலைத்தூள் பைக்கட்டுக்களையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட சிகரெட்டுக்கள், லேகியம், புகையிலைத்தூள் ஆகியவற்றுடன் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X