2025 மே 22, வியாழக்கிழமை

வேட்டையாடப்பட்ட இறைச்சி, துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Super User   / 2013 பெப்ரவரி 11 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். எம். மும்தாஜ்

வேட்டையாடப்பட்டதாக கூறப்படும் உக்குலான் மற்றும் ஆர்மடில்லா ஆகிய வகை மிருகங்களின் இறைச்சி மற்றும் துப்பாக்கியுடன் ஒருவரைக் கைது செய்துள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர். 

இஹல புளியங்குளம் 18ஆவது மைல் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே சந்தேகத்தின் பேரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஆர்மடில்லா மிருகத்தின் இறைச்சி மூன்று கிலோவுடன் அதன் உடற் பாகங்கள் மற்றும் உக்குலான் இறைச்சி ஒரு கிலோவுடன் அதன் உடற் பாகங்களும் சாலியவெவ பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துல்ல சாலியவெவ பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X