2025 மே 22, வியாழக்கிழமை

திகதி பிந்திய டிக்கெட் விற்பனை

Kogilavani   / 2013 பெப்ரவரி 12 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

வைத்தியசாலையின் அபிவிருத்தி நிதியத்திற்கு நிதிசேகரிக்கும் நோக்கில் திகதி பிந்திய சீட்டுழுப்பு டிக்கட்டுகளை விற்பனை செய்த சம்பவமொன்று மிஹிந்தலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மிஹிந்தலை அரச வைத்தியசாலைக்கு நிதி சேகரிக்கும் பொருட்டு 2013 ஜனவரி 5ஆம் திகதி சீட்டுழுப்பு முடிவு என்று குறிப்பிடப்பட்டிருந்த டிக்கட்டுக்களை 20 ரூபா வீதம் நேற்று முன்தினம் மிஹிந்தலை பிரதேசத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக நிதி சேகரிக்கும் எந்தத் தேவையும் இல்லை எனவும் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச சுகாதார சேவைப் பணிப்பாளர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X