2025 மே 22, வியாழக்கிழமை

ரணஜயபுர வித்தியாலயத்தின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பக்க நடவடிக்கை

Kogilavani   / 2013 பெப்ரவரி 16 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

பலத்த காற்றினால் சேதமாகிய அநுராதபுரம் ரணஜயபுர வித்தியாலயத்தினை 3 நாட்களுக்குள் புனரமைத்து எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் பாடசாலையை ஆரம்பிக்க நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடமத்திய மாகாண முதலமைச்சருக்கு ஆலோசனை வழங்கியதையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி இராணுவ வீரர்களைப் பயன்படுத்தி புனரமைப்பு நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வித்தியாலயத்திலுள்ள இரண்டு மாடிக் கட்டிடங்களில் 2 கட்டிடத்தின் கூரைகள் முற்றாகச் சேதமுற்றுள்ளதோடு அதன் சகல புனரமைப்புப் பணிகளையும் திங்கட்கிழமைக்குள் செய்து முடிக்கப்படவுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X