2025 மே 22, வியாழக்கிழமை

'அரிசி தட்டுப்பாடு ஏற்படபோவதாக கூறப்படும் பிரசாரத்தில் உண்மையில்லை'

Kogilavani   / 2013 மார்ச் 04 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படப்போவதாக நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரத்தில் எதுவித உண்மையும் இல்லை என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

கொள்வனவு செய்யப்பட்டுள்ள நெல் களஞ்சியசாலைகளில் போதியளவு உள்ளன. குறைந்த விலையில் நெல்லைக் கொள்வனவு செய்யும் நோக்கிலேயே இக்கும்பல் இவ்வாறான பொய்ப் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது.

எனவே குறைந்த விலையில் நெல்வைக் கொள்வனவு செய்வோர் மற்றும் கூடிய விலையில் அரிசியை விற்பனை செய்வோர் தொடர்பாக கமநல சேவைகள் மத்திய நிலையம், நுகர்வோர் அதிகார சபை ஆகியவற்றிடம் முறையிடுமாறும் பிரதி அமைச்சர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X