2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

அமைச்சர் றிசாத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Super User   / 2013 மார்ச் 05 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சருமான றிசாத் பதியுதீனுக்கு எதிராக இன்று புத்தளத்தில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

புத்தளம் நகரின் பிரதான சுற்று வட்டத்தில் இடம்பெற்ற இந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் புத்தளம் நகரின் அபிவிருத்திக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் நகர சபையின் ஊழியர் மீது தாக்குதல் நடத்தியதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதன்போது அமைச்சர் றிசாத், புத்தளம் நகரின் நகரின் அபிவிருத்திக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மற்றும்  நகர சபை ஊழியர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் ஆகியோருக்கு எதிராகவும் சுலோகங்களினை ஏந்தியவாறு கோசங்கள் எழுப்பப்பட்டது.

புத்தளத்தின் அபிவிருத்தியில் அமைச்சர் றிசாத் தலையிட வேண்டாம் எனவும் இதன்போது கோரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புத்தளம் நகர சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதான சுற்று வட்டத்திலிருந்து குருநாகல் - புத்தளம் பிரதான வீதியின் ஊடாக நகரின் சுற்று வட்டம் வரை சென்று மீண்டும் புத்தளம் பஸ் தரிப்பு நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர்.

இதேவேளை, இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் தொழிலதிபருமான அலி சப்ரி தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு கருத்து தெரிவிக்ககையில்,

"புத்தளத்தில் வாழும் இடம்பெயர்ந்த மற்றும் உள்ளூர் முஸ்லிம்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தவே புத்தளம் நகர பிதா பாயிஸ் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறார். புத்தளத்தில் கால காலமாக இருந்து வந்த ஞாயிறு வாராந்த சந்தையை நகர பிதா பாயிஸ் தனது தனிப்பட்ட நலன்களுக்காக சனிக்கிழமைக்கு மாற்றியிருக்கிறார்.

இந்த சந்தை தின மாற்றத்தை புத்தளத்திலுள்ள வர்த்தகர்கள் விரும்பவில்லை. இதனால் வர்த்தகர்கள் வியாபார ரீதியில் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள்.எனவே தான் சனிக்கிழமை மாற்றிய வாராந்த சந்தை தொடர்பில் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் ஆகியோரின் கருத்துக்களை நாம் கேட்டறிந்து வருகிறோம்.

எனவே நாம் செய்கின்ற பணியையும் புத்தளத்திலுள்ள மக்கள் எம்முடன் இருப்பதையும் கொஞ்சம் கூடப் பொறுக்க முடியாத நகர சபைத் தலைவர் பாயிஸ் தன்னுடைய குற்றங்களை மறைத்துக் கொள்ள சம்பந்தமே இல்லாத புதிய பிரச்சினைகளை ஏற்படுத்தப் பார்க்கிறார்.

தவிர இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் புத்தளத்திலுள்ள எந்தவொறு பொதுமகனும் கலந்துகொள்ளவில்லை. புத்தளத்திலுள்ள முஸ்லிம் மக்களுக்கு அமைச்சர் றிசாத் பல அபிவிருத்திப் பணிகளை செய்திருக்கிறார். புத்தளத்திலுள்ள முஸ்லிம்கள் அமைச்சர் றிசாதிற்கு என்று நன்றியுயைவர்களாகவே இருப்பார்கள்.

இன்று நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக கடும்போக்காளர்கள் பல்வேறு சதிகளை செய்து கொண்டிருக்கிhர்கள். இந்நிலையில் நாட்டிலுள்ள முஸ்லிம்களை பாதுகாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புன் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒரு அமைச்சரை வஞ்சிப்பது அநியாயமாகும்" என்றார்.

  Comments - 0

  • aj Tuesday, 05 March 2013 07:56 AM

    வடக்கில் பல இடங்களிலும் எல்லா விடையத்திலும் இவரின் தலையிடு, தமிழர் புறகணிப்பு தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. இதை தமிழன் கேட்டால் புலி, தடுக்குறார்கள் என்று பேசி தன்னுடைய குற்றத்தை தொடர்ந்து மறைத்து வருகிறார். இது குழந்தைக்கும் தெரியும். இந்த போராட்டம் நடத்தும் முஸ்லிம், சிங்கள மக்களுக்கு என்ன சொல்லுவார்? புலி ஆதரவு குழு? இல்லை சிங்கள புலி? இல்லை ஷியா முஸ்லிம்?

    இவரின் வேலையை மட்டும் செய்யுமாறு நாங்கள் பணிவாக கேட்டுகொள்ளுகிறோம். உங்கள் மதவாதம் வேண்டாம். உங்க இனவாதம் வேண்டாம். உங்கள் தலையீடு இந்திய வீட்டு திட்டம் முதல் எதிலும் வேண்டாம். அது அதுக்கு அதிகாரிகள் இருக்கிறார்கள் அவர்கள் செய்வார்கள்.

    Reply : 0       0

    mahadevan Tuesday, 05 March 2013 10:26 AM

    காய்க்கின்ற மரத்துக்குத் தான் கல்லடிகளும்,பொல்லடிகளும் அய்யோ பாவம் பியதாஸ,மற்றும் பண்டார பேன்றவர்களும்,சில நகர சபையின் உழியர்களும் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.புத்தளத்து மக்களும்,வர்த்தக சமூகமும் அமைச்சர் றிசாத் பதியுதீன் அய்யா மீது கொண்டுள்ள மதிப்பும்,மரியாதையும் குறையவில்லை என்பதை இன்று பிசுபிசுத்து போன பாயிஸின் ஏற்பாட்டில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தில் புரிகின்றது. நாட்டில் பலசேனாவுக்கு எதிராக பாயிசால் ஆரப்பாட்டம் செய்ய முடியுமா?.........

    Reply : 0       0

    vallarasu Tuesday, 05 March 2013 05:02 PM

    புத்தளம் மக்கள் பாயிஸிக்கு பின்னால் நிற்கிறார்கள்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X