2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

அநுராதபுரம் நகர் தனியார் பாடசாலை மாணவர்களுக்கு போதிய வசதிகள் இல்லை

Suganthini Ratnam   / 2013 மார்ச் 06 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

அநுராதபுரம் நகரத்தில் நடத்தப்படும் தனியார் பாடசாலைகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் போதுமானதாக இல்லை என அநுராதபுரம் மாநகர மேயர் எச்.பீ.சோமதாச தெரிவித்தார்.

வியாபார நோக்கில் இத்தனியார் பாடசாலைகளை நடத்த முயற்சிக்கப்டுகிறது. சில பாடசாலைகளில் சுமார் 500 மாணவர்கள் வரை கல்வி கற்கின்றபோதிலும், அவர்கள் அனைவருக்கும் ஒரேயொரு மலசலகூடமே உள்ளது.

அரசாங்கப் பாடசாலைகளில் ஒரு வகுப்பில் 40 - 45 மாணவர்களே இருக்க வேண்டும் என்ற வரையறை உள்ளது. அநுராதபுரம் நகரத்திலுள்ள சில தனியார் பாடசாலைகளில் ஒரு வகுப்பில் 100 இற்கு மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X