2025 மே 22, வியாழக்கிழமை

ஆசிரியர்கள் பற்றாக்குறையை நீக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2013 மார்ச் 06 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

மஹவிலச்சிய பேமடுவ சித்தார்த்த மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்த்து தருமாறு கோரி நேற்று செவ்வாய்க்கிழமை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாடசாலை வளாகத்திற்கு முன்னால் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300 பேர் வரையில் கலந்துகொண்டிருந்தனர்.

பாடசாலையில் 1200 மாணவர்கள் கல்வி பயில்வதோடு 58 ஆசிரியர்களுக்கான தேவையும் உள்ள அதேவேளை தற்போது 40 ஆசிரியர்கள் மாத்திரமே சேவையில் உள்ளனர்.

எனவே இப்பாடசாலையின் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்த்துத் தருமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X