2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

நிர்மாணப் பணிகளை துரிதகதியில் நிறைவு செய்ய நடவடிக்கை

Kogilavani   / 2013 மார்ச் 06 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம். சீ. சபூர்தீன்

அநுராதபுரம் மாவட்ட வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் திட்டமிடப்பட்ட பல செயற்திட்டங்களின் நிர்மாணப் பணிகளை துரிதகதியில் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வனவிலங்குகள் பாதுகாப்பு அமைச்சர் காமினி விஜித் விஜிதமுனி த சொய்சா வடமேல் வனவிலங்குகள் வலய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை வில்பத்துவ மின்சார வேலி மற்றும் ஹொரவப்பொத்தானை யானைகள் காப்பறன் ஆகியவற்றின் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாத்திற்குள் நிறைவு செய்யப்படவுள்ளது.

வடமேல் வனவிலங்குகள் வலயத்திற்குள் அநுராதபுரம், மன்னார், வவுனியா, குருநாகல் மாவட்டங்கள் உள்ளடங்குகின்றன.

யானை மனிதர்கள் மோதலைத் தடுக்கும் நோக்கில் வில்பத்துவ சரணாலய எல்லைப் பகுதி, மஹவிலச்சிய, தந்திரிமலை ஆகிய பிரதேசங்களில் 95 கிலோ மீற்றர் நீளமான மின்வேலி அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக 475 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது.

மேலும் ஹொரவப்பொத்தானை பகுதியில் 3000 ஏக்கர் நிலப்பரப்பில் யானைகள் காப்பறனும் அமைக்கப்பட்டு வருகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X