2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

கருவலகஸ்வௌ பிரதேச சபை தலைவருக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2013 மார்ச் 06 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

புத்தளம் மாவட்டத்தின் கருவலகஸ்வௌ பிரதேச சபையின் தலைவர் நீல வீரசிங்கவை எதிர்வரும் 8ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சாலியவௌ பிரதேசத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 7ம் திகதி விற்பனை பிரதிநிதி ஒருவரினை தாக்கியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய அவரினை சாலியவௌ பொலிசார் பிரதேச சபை தலைவரினை விசாரனைக்கு அழைத்தப்போதும் அவர் அவ்விசாரனைக்கு சமூகமளிக்கவில்லை.

இதனையடுத்து பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையினை தொடர்ந்து பிரதேச சபை தலைவர் நீதிமன்றத்தில் தனது சட்டதரணிகளுடன் இன்று நீதி மன்றத்தில் ஆஜரானார்.

இதனையடுத்து அவரை இம் மாதம் 08 திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X