2025 மே 22, வியாழக்கிழமை

மோட்டார் வண்டியைத் திருடிய முன்னாள் இராணுவ வீரர் கைது

Kogilavani   / 2013 மார்ச் 08 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் முன்னால் வைக்கப்பட்டிருந்த மோட்டார் வண்டியைத் திருடிச் சென்ற முன்னாள் இராணுவ வீரர் ஒருவரை கெக்கிராவ பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

ஒரு இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான மோட்டார் வண்டியே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையிலுள்ள நோயாளி ஒருவரைப் பார்வையிடுவதற்காக குறித்த நபர் வைத்தியசாலையின் முன்னால் மோட்டார் வண்டியை வைத்துச் சென்றுள்ளபோது அதனை இராணுவ வீரர் திருடிச் சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பாக அநுராதபுரம் தலைமைகப் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தலைமைகப் பொலிஸார் மாவட்டத்திலுள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.

இதன்போது கெக்கிராவ பொலிஸாரினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கெக்கிராவ விஜிதபுர பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X