2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கப்பம் பெற்ற சந்தேகநபர் கைது

Menaka Mookandi   / 2013 மார்ச் 09 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

அநுராதபுரம் - விலச்சிய வீதியில் சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பஸ் வண்டியொன்றில் கப்பம் பெற்ற நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பஸ் வண்டியின் சாரதி வடமத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் அபேசிரிவர்தனவிடம் முறையிட்டதைத் தொடர்ந்து பயணிகள் தோரணையில் வந்த பொலிஸார் சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளனர்.

சந்தேகநபர் தினமும் குறித்த வீதியில் பயணிக்கும் பஸ் வண்டிகளில் கப்பம் பெற்று வந்துள்ளார். அநுராதபுரம் கோட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி ரத்நாயக்காவின் ஆலோசனைப்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X