2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ஆனமடுவயில் இளைஞன் மாயம்; கார் மீட்பு

Menaka Mookandi   / 2013 மார்ச் 11 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ், எஸ்.எம்.மும்தாஜ்


ஆனமடுவ பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் அவ்விளைஞன் பயணித்த கார் முந்தல் நகரில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆனமடுவ பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேந்திர சிவலிங்கம் எனும் இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இவர் நேற்றைய தினம் கொழும்பிலிருந்து  ஆனமடுவவுக்கு செல்கையிலேயே காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இளைஞர் வீட்டுக்கு வர தாமதித்ததினையடுத்து ஆனமடுவ பொலிஸில் பெற்றோரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக குறித்த இளைஞர் பயணம் செய்த கார் முந்தல் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. காரினுள் அதன் திறப்பு மற்றும் ஆவணங்களும் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளினை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X