2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

சூதாட்டத்தில் ஈடுபட்ட எண்மர் கைது

Suganthini Ratnam   / 2013 மார்ச் 12 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்லாஹ்

சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 6 பெண்களையும் 2 ஆண்களையும் மாதம்பை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அத்துடன், சூதாட்டத்திற்காக பயன்படுத்திய பணத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சூதாட்டம்  நடைபெறுகின்ற  இடம் ஒன்றை நேற்று திங்கட்கிழமை மாலை சுற்றிவளைத்த பொலிஸார், இவர்களைக் கைதுசெய்துள்ளனர்.

மாதம்பை நகரில் உள்ள வீடு ஒன்றிற்கு பின்னால் நீண்ட நாட்களாக இரகசியமான முறையில்; சூதாட்டம் இடம்பெற்றுவந்ததாக தெரியவந்துள்ளது.

இந்த இடத்தைச் சுற்றிவளைத்தபோது இருவர் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணையை மேற்கொண்டுள்ள பொலிஸார், சிலாபம் மாவட்ட நீதிமன்றத்தில் இவர்களை ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையையும் முன்னெடுத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X