2025 மே 21, புதன்கிழமை

பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிய குற்றச்சாட்டில் மூவர் கைது

Kogilavani   / 2013 மார்ச் 13 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆகில் அஹமட்

மதவாச்சி நகரில் இரவுநேர காவல் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி மூவரும் நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மதுபோதையில் சுற்றித்திரிந்த இவர்களை தட்டிகேட்ட பொலிஸார் மீது மேற்படி மூவரும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் விசாரணைகளின் பின்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .