2025 மே 21, புதன்கிழமை

பொலிஸ் உத்தியோகஸ்தரை தாக்கியவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2013 மார்ச் 14 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

இரவு வேளையில் காவல் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரை பொல்லால் தாக்கி காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் இளைஞர் ஒருவரை இம்மாதம் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் மேலதிக மஜிஸ்திரேட்டும் மேலதிக மாவட்ட நீதவானுமான சந்திம எதிரிமான்ன உத்தரவிட்டார்.

ரம்பாவ வெலிஒயா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இரவு வேளையில் மதுபோதையில் வந்ததாகக் கூறப்படும் 3 இளைஞர்களை கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் புத்திமதிகூறி அனுப்பிய சற்று நேரத்தின் பின் வந்த மேற்படி சந்தேக நபர் பொலிஸ் உத்தியோகஸ்தரை பொல்லால்  தாக்கி காயப்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .