2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சிங்கள, முஸ்லிம் மக்களிடையே பிளவு ஏற்பட இடமளியேன்: ரஞ்சித் சமரக்கோன்

Suganthini Ratnam   / 2013 மார்ச் 17 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

வடமத்திய மாகாணத்தில் சிங்கள, முஸ்லிம் மக்களிடையே பிளவை ஏற்படுத்த இடமளிக்கமாட்டேன் என வடமத்திய மாகாண முதலமைச்சர் ரஞ்சித் சமரக்கோன் தெரிவித்தார்.

வடமத்திய மாகாண முதலமைச்சரின் இல்லத்தில் நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக சிற்சில பிரச்சினைகள் இடம்பெறுகின்றன. ஆனாலும் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவதை வடமத்திய மாகாணத்தில் அனுமதிக்க முடியாது.

அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களின் நிர்வாகசபை உறுப்பினர்களை அழைத்து பள்ளிவாசல்கள் தொடர்பாக தான் கலந்துரையாடியுள்ளதாகக் கூறிய அவர், மாகாணத்தில் உள்ள சகல பள்ளிவாசல்களுக்கும் விஜயம் செய்து அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு உதவியளிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கல்லஞ்சிய கிராமத்து பள்ளிவாசலுக்குச் தான் சென்றதோடு ஒரு இலட்சம் ரூபா நிதியை அப்பள்ளிவாசலுக்காக ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்தோடு மரதன்கடவள புளியன்குளம் பள்ளிவாசலின் அபிவிருத்திக்காக 3 இலட்சத்தை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் சிங்கள, முஸ்லிம் மக்களின் ஒற்றுமைக்காக தான் செயற்படுவேன்  அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0

  • MADURANKULI KURANKAR Sunday, 17 March 2013 05:43 PM

    ம்ம்ம்... அப்படியென்றால்... அநுராதபுரத்தில் புனித பூமி என்று பள்ளிவாசல் உடைத்து மக்களை வெளியேற்றியது யார்????

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X