2025 மே 21, புதன்கிழமை

பதவிய வைத்தியசாலையில் குருதி சுத்தப்படுத்தும் சேவையை ஆரம்பிக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2013 மார்ச் 21 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

பதவிய வைத்தியசாலையில் அடுத்த மாதத்திலிருந்து சிறுநீரக நோயாளர்களுக்கு குருதி சுத்தப்படுத்தும் செயற்பாடு ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடமத்திய மாகாண சுகாதார அமைச்சர் எச்.பீ.சேமசிங்க தெரிவித்தார்.

பதவிய வைத்தியசாலைக்கு கொழும்பு றொட்டரிக் கழகத்தினால் 5 குருதி சுத்தப்படுத்தும் இயந்திரங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.

குருதி சுத்தப்படுத்தும் செயற்பாட்டை மேற்கொள்வதற்காக தாதியர்களுக்கு பயிற்சி வழங்கும் வேலைத்திட்டம் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .