2025 மே 21, புதன்கிழமை

ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்து துண்டு பிரசுரம்

Kogilavani   / 2013 மார்ச் 22 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.என்.எம்.ஹிஜாஸ்


எதிர்வரும் 25ஆம் திகதி நாடாளாவிய ரீதியில் முழுநாள் ஹர்த்தாலுடன், அமைதியான சாத்வீகப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து புத்தளத்தில் துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

'முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு' என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இத்துண்டு பிரசுரத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி வர்த்தக நிலையங்கள், அலுவலகங்களினை மூடி சகல செயற்பாடுகளிலிருந்தும் விலகி நின்று முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அமைதியான முறையில் தமது எதிர்ப்பை காட்டுவோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள குறித்த துண்டு பிரசுரத்தில் எதிரவரும் 25ஆம் திகதி நோன்பு நோற்று நல்லமல்களினை புரிந்து துஆ பிரார்த்தனைகளில் ஈடுப்படுவோம் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .