2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

முன்னேஸ்வரம் காளி கோவிலில் நகைகளை திருடியவர் மடக்கிப்பிடிப்பு

Suganthini Ratnam   / 2013 மார்ச் 24 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

சிலாபம், முன்னேஸ்வரம் காளியம்மன் கோவிலில் தங்கநகைகளை திருடியதாகக் கூறப்படும் ஒருவரை மக்கள் மடக்கிப்பிடித்து  பொலிஸில் நேற்று சனிக்கிழமை ஒப்படைத்துள்ளனர்.

இதேவேளை, முன்னேஸ்வரம் காளியம்மன் கோவிலில் தங்கநகைகளை திருடியதாகக் கூறப்படும் ஒருவரை மக்கள் தங்களிடம் ஒப்படைத்துள்ளதை சிலாபம் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கோவிலிருந்து சுமார் 5 பவுண் தங்கநகைகளை திருடிக்கொண்டு இந்த சந்தேக நபர் வெளியில் வந்தபோது மக்கள் அவரை மடக்கிப் பிடித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாகத்தினர் சந்தேக நபரை சிலாபம் பொலிஸில் ஒப்படைத்துள்ளதாக மேற்படி கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடம் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர். 

  Comments - 0

  • MADURANKULI KURANKAR Sunday, 24 March 2013 06:02 PM

    கோவில் நகைகளை திருடினால் வௌவால்களாக மாறுவார்களாம்... உண்மையா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X