2025 மே 21, புதன்கிழமை

நாத்தாண்டியாவில் விபசார நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2013 மார்ச் 24 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.மும்தாஜ்


நாத்தாண்டிய பஹல வலஹாபிட்டி பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றதாகக் கூறப்படும் விபசார நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தக் ஹோட்டலுக்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அந்தப் பிரதேசத்தில் உள்ள  தொண்டர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள், மதத்  தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்தக் ஹோட்டலுக்கு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளே அதிகம் வருகின்றனர். இங்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு இளம் பெண்களை விபசார நடவடிக்கைக்காக விற்கப்பட்டு வந்தமை பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை மூலம் தெரியவந்தது. இதன்போது 3 இளம் பெண்கள் உட்பட 6 பேரை பொலிஸார் கைதுசெய்தனர்.

இந்தக் ஹோட்டலில் நடைபெற்றதாகக் கூறப்படும் விபசார நடவடிக்கையை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இந்தக் ஹோட்டலை நடத்துவதற்கான உரிய அனுமதி இல்லை எனவும் இங்கு பல்வேறு தவறான செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இந்தக் ஹோட்டலை இந்;த இடத்திலிருந்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .