2025 மே 21, புதன்கிழமை

ஒரு தொகுதி லேகியம் பைக்கற்றுக்கள் கற்பிட்டி பொலிஸாரால் கைப்பற்றல்

Super User   / 2013 மார்ச் 25 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

ஒரு தொகுதி லேகியம் பைக்கற்றுக்களினை நுரைச்சோலை பகுதியில் வைத்து கற்பிட்டி பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியுள்ளனர்.

உற்பத்தி பொருட்களினை சந்தைப்படுத்தும் லொறி ஒன்றில் மறைத்துக்கொண்டு செல்லப்பட்ட லேகியம் பக்கட்களினையே பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். குறித்த லொறியில் 1,875 லேகிய பக்கட்கள் காணப்பட்டதாக கற்;பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் ஸ்ரீபோது மதுரங்குளி பிரதேசத்தினை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் லேகியம் பக்கட்கள் கொண்டு செல்லப்பட்ட லொறியும் கற்;பிட்டி பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

போலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய கற்பிட்டி உதவி பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நுவான் பெரேரா தலைமையிலான குழுவினர் லேகியம் பக்கட்களினை கைப்பற்றினர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .