2025 மே 21, புதன்கிழமை

குருநாகலில் இரு அமைப்புக்களின் பெயரில் சுவரொட்டிகள்

Super User   / 2013 மார்ச் 25 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-இ. அம்மார்


குருநாகல் நகரில் இனங்களுக்கிடையே மனக் கசப்தைத் தூண்டும் வகையில் இன்று திங்கட்கிழமை இரண்டு அமைப்புக்களின் பெயர் குறிப்படப்பட்ட பதாதைகளும் சுரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன.

இதில் முஸ்லிம்களின் உரிமையை காக்கும் அமைப்பு என்ற பெயரில் சிங்கள மக்களுக்கு எதிராகவும் மற்றும் எத்துகல்புர சிங்களயோ என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு எதிராகவும் கொண்ட வாசகங்கள் அமைந்திருந்தன.

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தார் உடனடியாக குருநாகல் பொலிஸ் நிலையம் சென்று இது தொடர்பான முறைப்பாட்டினை செய்துள்ளார். சீ.ஐ.பீ. (4)298ஃ344ஃ2013-03-25  எனும் இலக்கத்தில் குருநாகல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டு செய்யப்பட்டுள்ளது.

இரு சமூகங்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்தச் செய்யும் சட்டவிரோதச் செயல் என்றும் இதனுடன் தொடர்புடையவர்களைத் தேடி அவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி அம்முறைபாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குருநாகல் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியான பிரதான இன்ஸ்பெக்டர் எம். நசார் இது சம்மந்தமாக உடன் நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியதுடன் சுரொட்டிகளையும் பதாதைகளையும் அகற்றுமாறும் உத்தரவு பிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .