2025 மே 21, புதன்கிழமை

வடமத்திய மாகாணக் கல்வி அமைச்சுக்கான நிதியில் நாட்காட்டிகள், நாளாந்த ஏடுகளை அச்சிட செலவு: ஹரிசன் எம்.

Suganthini Ratnam   / 2013 மார்ச் 26 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

வடமத்திய மாகாணக் கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட 1,500 இலட்சம் ரூபா நிதியில் 400 இலட்சம் ரூபா நிதியை நாட்காட்டிகள் மற்றும் நாளாந்த ஏடுகளை அச்சிடுவதற்கு செலவானதாக ஐக்கிய தேசியக் கட்சியின் அநுராதபுர மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் பீ.ஹரிசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

மாகாண கல்வி அமைச்சர் தனக்கு நெருக்கமான அச்சகங்களிலேயே இவற்றை அச்சிட்டுள்ளதோடு இச்செயற்பாட்டிற்கு பின்னால் ஊழல் நிறைந்துள்ளது. மாகாண கல்வி அமைச்சரின் செயற்பாட்டால் கல்வி மட்டம் மேலும் கீழ்நோக்கிச் செல்ல ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினர்.

ஐ.தே.க. வின் ஆட்சிக் காலத்தில் வடமத்திய மாகாணத்தின் கல்வி நிலை 3ஆம் அல்லது 4ஆம் நிலையில் காணப்பட்டது. ஆனால் தற்பொழுது 7ஆம் அல்லது 8ஆம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த வருட இறுதிக்குள் 9ஆம் நிலைக்குத் தள்ளப்பட்டு விடும் எனவும் அவர் தெரிவித்தார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .