2025 மே 21, புதன்கிழமை

போலி மாணிக்கக்கற்களை விற்பனை செய்த பெண் கைது

Suganthini Ratnam   / 2013 மார்ச் 31 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.மும்தாஜ்

போலியான இரண்டு மாணிக்கக் கற்களை சுமார் ஐந்தரை இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படும் பெண் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

சாலியவெவ, கலவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்னே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ரம்புக்கென பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் சாலியவெவ பொலிஸ் நிலையத்தில் நேற்றுமுன்தினம்  செய்த முறைப்பாட்டை அடுத்து நேற்று சனிக்கிழமை இந்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த போலி மாணிக்கக்கல் விற்பனையில் மேலும் இருவர் தொடர்புபட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இருப்பினும் அவர்கள் இருவரும் இதுவரையில் கைதுசெய்யப்படவில்லை எனவும் கூறினர்.

இந்தச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் ஒருவருடன்  தொலைபேசியில் தொடர்புகொண்டு மாணிக்கக்கல் விற்பனை தொடர்பில் பேசியுள்ளார்.

இதனை அடுத்து முறைப்பாட்டாளர் மற்றொருவருடன் இணைந்து  சந்தேக நபரான பெண்ணின் வீட்டில் வைத்து கொடுக்கல், வாங்கலில் ஈடுபட்டுள்ளார்.

இதன் பின்னர் தான் வாங்கிய இரண்டு மாணிக்கக் கற்களையும் இரத்தினபுரியில் உள்ள பிரபல மாணிக்கக்கல் வியாபாரியிடம் கொண்டு சென்று விற்பனை செய்ய முற்பட்டபோது, அவை போலியான மாணிக்கக் கற்கள் எனத் தெரியவந்துள்ளது. இதனை அடுத்தே மாணிக்கக் கற்களை வாங்கிய நபர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .