2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

புத்தளத்தில் முப்பெறும் நிகழ்வு

Kogilavani   / 2013 மார்ச் 31 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு 22ஆவது வருட நிறைவு தினம், வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு, பெற்றோர் தினம் என்பனவற்றினை முன்னிட்டு முப்பெரும் நிகழ்வு புத்தளம், எருக்கலம்பிட்டி முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் நேற்று சனிக்கிழமை மாலை நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஈரான் குடியரசின் இலங்கைக்கான கலாநிதி ஹஸ்ஸானி பூர் கலந்துகொண்டார்.

இதன்போது பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்ற மாணவர்களுக்கும் கடந்த ஆண்டு 5ஆம் ஆண்டு புலமை பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் முத்தலீப் பாவா பாறுக், வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர், பேராசிரியர் எஸ்.எச்.ஹிஸ்புல்லா, ஈரான் தூதரக அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர் குறித்த பாடசாலையின் அபிவிருத்திக்காக 10 இலட்சம் ரூபா தனது நிதியிலிருந்து ஒதுக்குவதாக தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X