2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டில் இருவர் கைது

Suganthini Ratnam   / 2013 மார்ச் 31 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.மும்தாஜ்

இளம் தாய் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முற்பட்டபோது, அயல் வீட்டுப் பெண்ணின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் தப்பிச்சென்றதாகக் கூறப்படும் இருவரை இன்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சாலியவெவ,  ரணவராபிட்டி பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இளம் தாய் தனது கைக்குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்தபோது, அவரின் வீட்டுக்குச் சென்ற இந்த இரு சந்தேக நபர்களும் அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்துள்ளனர்.

இந்த நிலையில்,  இந்த தாய் உதவி கோரி கூச்சலிட்டபோது அங்கு வந்த அயல் வீட்டுப் பெண் ஒருவர்  இந்த இரு  சந்தேக நபர்களையும் பொல்லினால் தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சாலியவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தததைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், இரு சந்தேக நபர்களையும் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X