2025 மே 21, புதன்கிழமை

முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்பட ஜனாதிபதி இடமளிக்கமாட்டார்: அமைச்சர் பீலிக்ஸ்

Super User   / 2013 ஏப்ரல் 01 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ், ஏ.எஸ்.எப்.ஜெஸீரா

நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு எவ்வித அநியாயங்களோ அல்லது பாதிப்புக்களோ ஏற்பட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடமளிக்கமாட்டார் என்பதினை இவ்விடத்தில் உறுதியாகவும், பொறுப்புணர்வுடனும் தெரிவித்துக் கொள்கின்றேன் என சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரோ தெரிவித்தார்.

புத்தளம், கற்பிட்டி பிரதேசத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு உறுப்பினர்களினை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு இன்று நுரைச்சோலை மற்றும் கடையாமோட்டை ஆகிய இடங்களில் நடைப்பெற்றது.

இதன்போது கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பீலிக்ஸ் பெரோ மேற்படி தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

"முஸ்லிம்கள் இந்த நாட்டுக்காக தியாகங்களினை செய்துள்ளனர். ஜெனீவா மாநாட்டின் போதும் முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டுள்ளன. இவற்றை நாம் ஒரு போதும் மறக்கவில்லை.இன்று நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் எமது அரசாங்கம் உள்ளது.

எனவே எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு கானும் சக்கி இந்த அரசுக்கு உள்ளது. எனவே முஸ்லிம்கள் தொடர்ந்தும் எம்முடன் இணைந்திருக்க வேண்டும். இந்த நாட்டின் அபிவிருத்திக்கு நாம் எல்லோரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும்" என்றார்.

இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அங்கத்துவ அட்டைகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் விக்டர் அன்டனி பெரேரா, மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம். ரியாஸ், கல்பிட்டி பிரதேச சபை தலைவர் மின்ஹாஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .