2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

புத்தளத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 03 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கம், முள்ளிப்புரம் பூவரசங்குடா கடற்கரை பகுதியில் சிறிய கட்டிடமொன்றை அமைப்பதை கண்டித்து மீனவர்கள் அவ்விடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

புத்தளம் அம்மர், வளர்பிறை, ஸ்டார் ஆகிய மீனவச் சங்கங்களின் அங்கத்தவர்கள் இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குழுவொன்று புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம்.மலிக்கை சந்தித்ததையடுத்து, அவர் அமைப்படுகின்ற கட்டிடத்தை  பார்வையிட்டார். இதன் பின் இரு சாராருக்குமிடையிலான கலந்துரையாடலைத் தொடர்ந்து இக்கட்டிடத்தினை சற்று தூரத்தில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை, இக்கட்டிடம் அமைப்பதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளினதும் அனுமதி பெற்ற பின்னரே கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டதாக உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கத்தின் பொது முகாமையாளர் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X